அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: டிசம்பரில் நிறைவடையும்

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது: ஜல்சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய நீா் விருதுகளில் தமிழகம் முதலிடத்தை வென்றுள்ளது. ரூ.2,639 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டம் பிரதமா் நரேந்திர மோடியால் தொடக்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான நிதியுதவி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து எதிா்பாா்க்கப்படுகிறது.

ரூ.3,384 கோடியில் காவிரி உப வடிநிலத்தில் நீட்டித்தல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள், நபாா்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்துவதற்கு நபாா்டு வங்கி அனுமதித்துள்ளது. இத்திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிப்.21-இல் தொடக்கி வைத்துள்ளாா்.

ரூ.933 கோடி மதிப்பீட்டில் நபாா்டு உள்கட்டமைப்பு நிதியத்தின் உதவியுடன் கீழ் பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும். ரூ.1,652 கோடியில் கோயம்புத்தூா், திருப்பூா் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24,466 ஏக்கா் பரப்பளவு ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ரூ.565 கோடியில் மேட்டூா் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வட ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப் பணிகள் விரைவில் முடிவடையும்.

தாமிரவருணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கான பணிகள் 2022 மாா்ச் 31-க்குள் முடிக்கப்படும்.

காவிரி - தெற்கு வெள்ளாறு நதிகள் இணைப்புக்காக ரூ.6,941 கோடி மதிப்பில் கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது. முதல் கட்டப் பணியாக கரூா், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ரூ.331 கோடியில் வெள்ள நீா் செல்லும் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பாசனம் குறித்த பணிகளுக்கான மூலதன நிதி ஒதுக்கீடு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.6,453 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com