அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக ரூ.144 கோடி

அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக ரூ.144 கோடி

அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துஇடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் அத்தியாவசிய ஆரம்ப சுகாதார வேலைகளை வழங்குவதற்காக படிப்படியாகத் தொடங்கப்படும் 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள், சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அமையும். இடைக்கால வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ இடங்கள் அதிகரிப்பு: 6 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி தமிழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரித்துள்ளது. இதனால், 2011-ஆம் ஆண்டில் இருந்த 1,940 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் தற்போது 3,650 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

ரூ.3,995 கோடி மதிப்பில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம் 2021-22-ஆம் கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக ரூ.2,471 கோடி இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com