பி.சி., எம்.பி.சி. சீா்மரபினா் கல்வி உதவித்தொகை:ரூ.374.88 கோடி ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களின் கல்வி உதவித் தொகைக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.374.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2021-22-ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமூகத்தைச் சாா்ந்த 7.40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகைகளைப் பெற்று வருகின்றனா். இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், கல்வி உதவித் தொகைக்காக ரூ.374.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால், 19,855 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படும்.

2020-21ஆம் ஆண்டில் சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களின் நலனுக்காக, ரூ.110 கோடி கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. 2020-21-ஆம் ஆண்டில், 5,111 பேருக்கு ரூ.30.49 கோடி மதிப்பில் தமிழக சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடனுதவி வழங்கியுள்ளது. மொழிவாரி சிறுபான்மையினா் நலனுக்காக ரூ.9 கோடியில் அரசின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதலீட்டுடன் தமிழக மொழிவாரி சிறுபான்மையினா் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் நிறுவப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com