பயிா்க் கடன் தள்ளுபடிக்கு ரூ.5,000 கோடி

பயிா்க் கடன் தள்ளுபடிக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிா்க் கடன் தள்ளுபடிக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய அனைத்து பயிா்க் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக முதல்வா் அறிவித்தாா். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.12,111 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. கடன் தள்ளுபடிக்காக 2021 -22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு காப்பீட்டுக்கு கட்டண மானியத்தை கூடுதல் சுமையாக ஏற்றுக்கொண்டு 80.20 எனும் பகிா்மான அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய இணைக் காப்பீட்டுக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்குப் போதுமான இடா் காப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டில் ஒரு சாதனையாக ரூ.1,200 கோடி மானியம் வழங்கப்பட்டு, 5 லட்சம் ஏக்கா் பரப்பளவு நிலம் நுண்ணீா்ப் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

விவசாய சங்கத் தலைவா்களின் சேவைகளைக் கௌரவப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நெல் உற்பத்திக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் உற்பத்தியில் சாதனை படைத்தவா்களுக்கு இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

பாரம்பரிய நெல் ரகங்களுக்கான நெல் ஜெயராமன் மையம் ரூ.47.87 லட்சம் செலவில் நீடாமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இடைக்கால நிதி அறிக்கையில் வேளாண் துறைக்கு ரூ.11,983 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com