கூத்தாநல்லூர் சாய்பாபா கோயிலில் உலக நன்மைக்காகக் கூட்டுப் பிரார்த்தனை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஷீரடி சாய்பாபா கோயிலில், உலக நன்மைக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. 
அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கு ஷீரடி சாய்பாபா.
அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கு ஷீரடி சாய்பாபா.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஷீரடி சாய்பாபா கோயிலில், உலக நன்மைக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. 

லெட்சுமாங்குடி, மரக்கடையில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில், நிறுவனர் வெள்ளைய்யன் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டின் படி, உலக நன்மைக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டன. 

கோயிலின் முன்புறம் உள்ள வளாகத்தில், சாய்பாபாவின் பாதரட்சை முன்பாக, கூத்தாநல்லூர், தமிழகம், இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவரும் கரோனா என்ற கொடிய நோயிலிருந்து முழுமையாக விடுபட வேண்டியும், சண்டைச், சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டியும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, ஷீரடி சாய்பாபாவுக்கும், பாதரட்சைக்கும் மஞ்சள், பன்னீர், தேன், தயிர், இளநீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. கூட்டுப் பிரார்த்தனையில், மரக்கடை, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், கோரையாறு, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரார்த்தனையைத் தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com