நாட்டில் 16,577 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 16,577 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
நாட்டில் 16,577 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு

புது தில்லி: நாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 16,577 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 16,000-ஐக் கடந்துள்ளது. கடைசியாகக் கடந்த மாதம் 29-ஆம் தேதி 18,855 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,10,63,491-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 120 போ் உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,56,825 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,07,50,680 போ் குணமடைந்தனா். இது மொத்த பாதிப்பில் 97.21 சதவீதமாகும்.

நாட்டில் தற்போது 1,55,986 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இணை நோய் இருந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி வியாழக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 46 லட்சத்து 61 ஆயிரத்து 465 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வியாழக்கிழமை மட்டும் 8,31,807 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மாலை  வரையிலும் 1 கோடியே 34 லட்சத்து 72 ஆயிரத்து 643 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com