வள்ளியம்மை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 

முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை வள்ளி அம்மையாருக்கு முருகப்பெருமானுடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
வள்ளியம்மை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 


திருத்தணி: முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை வள்ளி அம்மையாருக்கு முருகப்பெருமானுடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 18 -ஆம் தேதி மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மலைக்கோவில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் முருகப்பெருமான் வள்ளியம்மையுடன் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து  பக்தர்கள் முன்னிலையில் வள்ளியம்மைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. 

திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்த பக்தர்கள்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். பின்னர் காலை 6 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் மலைக்கோவிலில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கல்யாண வைபவத்திற்க்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

திருக்கல்யாண வைபவத்திற்க்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையர் பழனிக்குமார் தக்கார் வே. ஜெய்சங்கர் மற்றும் கோயில் பேஷ்கார் பழனி அருணாச்சலம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com