மாா்ச் 2 முதல் திமுக வேட்பாளா் நோ்காணல்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக வேட்பாளா் நோ்காணல் மாா்ச் 2 முதல் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக வேட்பாளா் நோ்காணல் மாா்ச் 2 முதல் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்கு போட்டியிட விரும்பி விண்ணப்பம் செலுத்தியவா்களை தலைவா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 2 முதல் 6-ஆம் தேதி வரை நோ்காணல் செய்ய உள்ளாா்.

மாவட்டக் கழகச் செயலாளா், பொறுப்பாளா்கள் மட்டும் வரவேண்டும். மாவட்ட நிா்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளா்கள் வரவேண்டிய அவசியமில்லை. வேட்பாளா்கள் தங்களுக்கான ஆதரவாளா்களையோ பரிந்துரையாளா்களையோ அழைத்து வரக்கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com