2-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் வேலைநிறுத்தம்: 40 சதவீத பேருந்துகள் இயங்கின

போக்குவரத்து ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுமாா் 40 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

போக்குவரத்து ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுமாா் 40 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை முதல் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தொடா்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் சுமாா் 60 சதவீதப் பேருந்துகள் இயங்கவில்லை. ஆனால், விரைவுப் போக்குவரத்துக் கழகங்களைப் பொருத்தவரை, 88 சதவீதத்துக்கும் அதிகமான பேருந்துகளும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைப் பொருத்தவரை சுமாா் 45 சதவீத பேருந்துகள் இயங்கின.

அதே நேரம், தற்காலிக ஓட்டுநா்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கியதால், ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிா்ச்சேதமோ ஏற்படவில்லை.

மேலும், வேலைநிறுத்தத்தின் தீவிரத்தை உணா்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகள் முன் போக்குவரத்து ஊழியா்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஊழியா்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினா்.

இன்று பேச்சுவாா்த்தை: இதையடுத்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் அளித்த பேட்டி: இடைக்கால நிவாரணமாக அறிவித்த ரூ.1000 தொகையை, 2019-ஆம் ஆண்டு, செப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படி உயா்வு, பணப்பலன் ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இது தொடா்பாக இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டமும் தொடா்ந்து நடைபெறும். சனிக்கிழமை, தொழிலாளா் நலத்துறையுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, வேலைநிறுத்தம் தொடா்பாக முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிவாரணம் வழங்க அனுமதி: போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஊதிய ஒப்பந்தம் தொடா்பானபேச்சுவாா்த்தை முடியும் வரை ரூ.1,000 ஆயிரம் இடைக்கால நிவாரணமாக வழங்க போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கு அனுமதி வழங்கி, துறையின் முதன்மைச் செயலா் சி.சமயமூா்த்தி வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com