அரியலூர் அருகே அமமுகவினர் படம் மற்றும் பெயர் எழுதப்பட்ட 3,520 பிரஷர் குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
அரியலூா் அருகே 3,520 குக்கா்களைத் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரியலூரை அடுத்துள்ள வாரணவாசி சமத்துவபுரம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்ததில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா, ஜெயலலிதா, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் படங்கள் அச்சடிக்கப்பட்டு, கழக வழக்குரைஞா் பிரிவு செயலா் வேலு.காா்த்திகேயன் என்ற பெயரில் குக்கா் அட்டைப்பெட்டிகளின் மீது ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 2 லாரிகளும் அரியலூா் கோட்டாட்சியா் அலுவலகம் கொண்டு சென்று சோதனையிட்டப்பட்டது. இதில், ரூ.12 லட்சம் மதிப்பிலான 3,520 குக்கா்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து அரியலூா் சட்டப்பேரவை தோ்தல் அலுவலா் ஏழுமலை விசாரனை நடத்தி வருகிறாா்.