திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியே எஸ்டிபிஅய்: கூத்தாநல்லூர் மாநாட்டில் கட்சித் தலைவர் பேச்சு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.அய்.கட்சி சார்பில், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியின் அரசியல் எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.
கூத்தாநல்லூர் மாநாட்டில் கட்சித் தலைவர் பேச்சு
கூத்தாநல்லூர் மாநாட்டில் கட்சித் தலைவர் பேச்சு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.அய்.கட்சி சார்பில், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியின் அரசியல் எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு, தொகுதித் தலைவர் கே.பி. முஹம்மது சுல்தான் தலைமை வகித்தார். தமிழ் மாநில பொதுச் செயலாளர் என்.நிஜாம் முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலச் செயலாளர் எம்.நாகூர் மீரான், விம் மாநில பொதுச் செயலாளர் எம்.ஏ.நசீமா பானு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஜெ.முகம்மது ஜாஸ்மின் வரவேற்றார். 

மாநாட்டில், எஸ்.டி.பி.அய். கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசியது..

மிகப் பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளைப் பாராட்டுகிறேன். இங்கு, ஆண்களை விட, பெண்களின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. இதிலிருந்தே தெரிகிறது எஸ்.டி.பி.அய்.கட்சியின் வெற்றி.பா.ஜ.கட்சி, ஆர்.எஸ்.எஸ்.ஆகியவற்றின் மதவாதம் தான் இந்தியாவின் மிகப் பெரிய எதிரி. ஆர்.எஸ்.எஸ்.யை எதிர் கொள்ளும் ஒரே கட்சி எஸ்.டி.பி.அய். கட்சிதான். 

 மாநாட்டில் பங்கேற்றவர்கள்
 மாநாட்டில் பங்கேற்றவர்கள்

தலைமுறை, தலைமுறையாக வேதனைகளை இஸ்லாமிய சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அந்த இஸ்லாமிய சமூகத்திற்கான, விடியலை நோக்கிச் செல்வதற்காக ஒரு வாய்ப்பைக் கேட்கிறோம். இஸ்லாமியர்களுக்கான அங்கீகாரத்தைக் கேட்கிறோம். இறைவன் நினைத்துவிட்டால், அதை யாராலும் தடுக்க வே முடியாது. எது நடக்க வேண்டுமோ அது சரியானபடி நடக்கும். தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.க.,வும் முயற்சித்து வருகிறார்கள். 

தமிழகத்தில் வளருவதற்கு பாஜகவிற்கு வாய்ப்பேயில்லை. தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமோ, அவரை வெற்றியடையச் செய்வார்கள். பரிசுக் கோப்பை வாங்க வேண்டும் என ஆசைப்பட்டால், வெற்றி பெற்று வாங்க வேண்டும். காசியப்பன் பாத்திரக் கடையில் போய் பரிசுக் கோப்பை வாங்கலாமா. அதே போல், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும். 

பா.ஜ.க., எந்த அடிப்படையில் தமிழகம் வருகிறது எனத் தெரியவில்லை. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என அனைவரும், அண்ணன், தம்பிகளாக, சித்தி, சித்தப்பாக்களாக, மாமான், மச்சான்களாக, அக்கா, தங்கைகளாக தமிழகத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். அந்த ஒற்றுமையில் பிரிவை ஏற்படுத்த பாசிஸ கட்சிகள் முயற்சி செய்து வருகிறது. திராவிட இயக்க வரலாற்றில் 1956 ஆம் ஆண்டு நாட்டில், வீரியமுடன் திராவிட இயக்கம் எப்படிச் செயல்பட்டதோ, அதேபோல், அந்த திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக எஸ்.டி.பி.அய்.கட்சி இயங்கி வருகிறது. 

திராவிட இயக்கம் ஒரு போராட்ட இயக்கம். தமிழ் உணர்வோடு, திராவிட சித்தாந்தத்தோடு, பெரியார், அண்ணா போன்றவர்கள் தமிழகத்தைப் பண்படுத்தினார்கள். அந்தப் பொறுப்பை, பெரியாரும், அண்ணாவும் எஸ்.டி.பி.அய்., கட்சியின் கையில் வழங்கியிருப்பதாக நினைக்கிறோம். அவர்களின் வழிகளில் திராவிடா இயக்கத்தின் கொள்கையோடு செயல்படுவோம் என்று பேசினார்.மாநாட்டு ஏற்பாடுகளை, மாவட்டத் தலைவர் ஏ.தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட துணைத் தலைவர் எம்.ஏ.எஸ்.அப்துல் அஜீஸ் ஃபைஜி, மாவட்டச் செயலாளர் டி.எம்.ஹெச்.அப்துல் ராஜிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரச் செயலாளர் கே.என்.அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com