இடஒதுக்கீடு சதவிகிதம் குறைந்ததால் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: ஆண்டிப்பண்டாரத்தார் சமூகம்

இட ஒதுக்கீடு 2.5 சதவிகிதமாகக் குறைந்ததால், ஆண்டிப்பண்டாரத்தார் சமூகத்தினர் மற்றும்  உள் பிரிவினர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
இடஒதுக்கீடு சதவிகிதம் குறைந்ததால் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: ஆண்டிப்பண்டாரத்தார் சமூகம்

அவிநாசி: இட ஒதுக்கீடு 2.5 சதவிகிதமாகக் குறைந்ததால், ஆண்டிப்பண்டாரத்தார் சமூகத்தினர் மற்றும்  உள் பிரிவினர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நலச் சங்க மாநில நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் அவிநாசி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஜோதி (எ) சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். 

மாநிலத் தலைவர் என். பிரகாசம், மகளிரணி செயலாளர் பூங்கொடி வெங்கடாசலம், துணைத் தலைவர் புருசோத்தமன், மாநில பொறுப்பாளர்கள் மோகன்தாஸ், கதிர், விஸ்வராஜ், பாலு, சந்திரன், சேகர், கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஆண்டிப்பண்டாரத்தார் சமூகத்தார் மற்றும் உள் பிரிவினர் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வாழ்வாதாரத்தைப் படிப்படியாக நடத்தி வந்தோம். 

இதற்கிடையில் தற்போது தமிழக அரசு, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடாக 10.5 சதவிகிதம் அறிவித்ததால், ஆண்டிப்பண்டாரத்தார் சமூகத்தார் உள்ளிட்ட உள் பிரிவினர் உள் ஒதுக்கீடு 2.5 சதவிகிதமாக குறைந்து விட்டது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை கேள்விக்குறியாகி விட்டன. 

எனவே, இதனைக் கண்டித்து சட்டப் பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com