அம்பை, கல்லிடைக்குறிச்சியில் பசுமை புத்தாண்டுக் கொண்டாட்டம்

அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சியில் பசுமை புத்தாண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மர வங்கியை திறந்து வைத்தார்.
பசுமைப்புத்தாண்டை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி கோட்டைத் தெருவில் மரக்கன்று நடுகிறார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.
பசுமைப்புத்தாண்டை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி கோட்டைத் தெருவில் மரக்கன்று நடுகிறார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சியில் பசுமை புத்தாண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மர வங்கியை திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் மற்றும் பசுமை தோழர்கள் அறக்கட்டளை சார்பாக பசுமை புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லிடைக்குறிச்சி கோட்டை தெரு பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு  வாழ்த்துகள் தெரிவித்தார்.

தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் நகராட்சி மற்றும் பசுமை தோழர்கள் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று வங்கியை திறந்து வைத்து பார்வையிட்டார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி மாவட்டத்திற்குள்பட்ட மணிமுத்தாறு, பாபநாசம் பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து மாநில அரசு
மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பொங்கலுக்கு முன் முடிவு எடுக்கப்படும்.

அம்பாசமுத்திரத்தில் மரக்கன்று வங்கியைத் திறந்துவைத்துப் பார்வையிடுகிறார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த 36 பயணிகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ததில் தொற்று இல்லாதது தெரியவந்தது. 

மேலும் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று பெய்த தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 

இதையடுத்து பாபநாசம் அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் காலையில் 2,400 கன அடியாக குறைக்கப்பட்டது. வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து குறையும் பட்சத்தில் மதியத்திற்கு மேல் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்றார்.

நிகழ்ச்சியில் வருவாய் துறை, பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com