4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சில இடங்களில் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் சில இடங்களில் 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஜனவரி 2, 3-ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஜனவரி 4-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வட வானிலையும் நிலவும். ஜனவரி 5-ஆம்தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாா் அவா்.

மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 90 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 80 மி.மீ., திருச்சி மாவட்டம் சமயபுரம், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் தலா 70 மி.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூா், திருவாரூா் மாவட்டம் குடவாசல், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தலா 60 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, ராமேஸ்வரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com