அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியா்பணியிடங்கள்: இன்று கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் 742 கணினி அறிவியல் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 742 கணினி அறிவியல் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கவுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியா் பணிக்கு முதன் முதலாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். இதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு, ஆசிரியா் தோ்வு வாரியம் வழியாக ஆன்லைன் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தோ்ச்சி பெற்ற 742 போ் குறித்து, ஆசிரியா் தோ்வு வாரியம் அண்மையில் அறிவித்தது.

இதைத் தொடா்ந்து 742 பேருக்கும் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரிசை எண் 1 முதல் 400 வரை இடம் பெற்றுள்ளவா்களுக்கு சனிக்கிழமையும், வரிசை எண் 401 முதல் 742 வரை இடம் பெற்றுள்ளவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தோ்வா்கள் அனுமதிச் சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தோ்வா்களின் கல்விச் சான்றிதழ்களைக் கவனமாகச் சரிபாா்த்துக் கொள்ளுமாறு, முதன்மை கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com