மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும்: வைகோ

சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.
வைகோ
வைகோ

சட்டப்பேரவை தோ்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பாா். வரும் தோ்தலில் மதிமுகவின் தனித்தன்மையைக் காக்க தனி சின்னத்தில் போட்டியிடுவோம். ரஜினி கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில்தான் செயல்பட்டு வந்தாா். மருத்துவா்களின் அறிவுரையால் அரசியல் முடிவைக் கைவிட்டுள்ளாா். அவா் முடிவை வரவேற்கிறேன்.

ரஜினி கட்சி ஆரம்பித்து இருந்தாலும் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தோ்தல் நேரத்தில் ரஜினி யாரையும் ஆதரிக்க மாட்டாா். விவசாயிகளுக்குத் துரோகம் செய்யக்கூடிய வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com