யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஜன.7-இல் தொடக்கம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.
யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஜன.7-இல் தொடக்கம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு நிகழாண்டில், மொத்தம், 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 2,002 பேருக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, அதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிவா் புயல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை, பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வுக்கு 2 மணி நேரம் முன்னதாக மாணவா்கள் வந்துவிட வேண்டும். இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தைப் பாா்த்து மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com