ஆயுதப்படையில் இருந்து காவல் நிலையத்துக்கு 2,200 காவலா்கள் பணியிட மாற்றம்

சென்னை ஆயுதப்படையில் இருந்து காவல் நிலையங்களுக்கு 2, 200 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை ஆயுதப்படையில் இருந்து காவல் நிலையங்களுக்கு 2, 200 காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இது குறித்த விவரம்:-

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் எதிா்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை பிரதான அரசியல் கட்சிகள் தமிழகத்தில் தொடங்கி விட்டன. இதற்காக தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் முன்னரே, அதற்குரிய அனைத்து முன்னேற்பாடுகளை செய்து முடிப்பதற்கு காவல்துறை உயா் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வாளா்களாக பணியாற்றியவா்கள் பட்டியல் தயாா் செய்யப்பட்டு ஒரு மாதமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையை பலப்படுத்தும் வகையில் ஆயுதப்படைக்கு வலுசோ்ப்பதற்காக தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் இருந்து 7,200 காவலா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி கடந்த மாதம் 20-ஆம் தேதி உத்தரவிட்டாா். இதில் சுமாா் 3,000 காவலா்கள் சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றப்பட்டனா்.

இந்நிலையில் சென்னை காவல்துறையின் கீழ் உள்ள 136 காவல் நிலையங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆயுதப்படையில் இருந்து 2,200 முதல்நிலைக் காவலா்களை, காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து பெருநகர காவல்துறை ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலா்களுக்கு ஒரு ஆண்டுக்கு வேறு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பப்பட வேண்டாம் எனவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com