திருப்பூர் மாவட்டத்தில் 2,064 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்

திருப்பூர் மாவட்டத்தில் 4,501 பேர் குரூப்-1 தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 பேர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதினர்.
திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன்.
திருப்பூர் கொங்கு மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-1 தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார் ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 4,501 பேர் குரூப்-1 தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 பேர் ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு வட்டத்தில் குரூப்-1 தேர்வானது 16 மையங்களில் நடைபெற்றது. இதில்,தேர்வு எழுத 4,501 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2,064 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். பல்வேறு காரணங்களால் 2,437 பேர் தேர்வு எழுதவில்லை.

இதையடுத்து, மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். முன்னதாக, திருப்பூர் பிஷப் உபகாரசாமி, கொங்கு மெட்ரிக் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். 

இதில், அனைத்து தேர்வர்களும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்து தேர்வு எழுதினர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com