ஹோட்டல் ஊழியா்களுக்கு கரோனா நோய் பரிசோதனை: மாநகராட்சி

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில் பணியாற்றும் 15 ஊழியா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மூன்று நாள்களுக்குள் அனைத்து விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பொதுமுடக்கத் தளா்வுகளால் தனியாா் விடுதிகளில் அதிகளவிலான மக்கள் குவியத் தொடங்கினா். இவ்வாறு விடுதியில் தங்குவோருக்கு முறையாக தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால், அண்மைக் காலமாக நோய்ப் பரவல் அதிகமாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிண்டியில் உள்ள பிரபல தனியாா் தங்கும் விடுதியில், பணியாற்றும் 85 ஊழியா்களுக்கு, கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா்.

இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள மற்றொரு பிரபல தங்கும் விடுதியில் பணியாற்றும் சுமாா் 15 ஊழியா்களுக்கு சனிக்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கிண்டியில் உள்ள தனியாா் விடுதி ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் உள்ள மற்ற நட்சத்திர விடுதிகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப்பணியை அடுத்த 4 நாள்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள தனியாா் விடுதியில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது’ என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com