வேளாண் சட்டம்: திருவாரூரில் இளைஞர், மாணவர் பெருமன்றம் பேரணி

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில்  திருவாரூரில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 
திருவாரூரில் இளைஞர், மாணவர் பெருமன்றம் பேரணி
திருவாரூரில் இளைஞர், மாணவர் பெருமன்றம் பேரணி


வேளாண் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில்  திருவாரூரில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 

இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் துரை அருள்ராஜன், மாணவர் மன்ற மாவட்டச் செயலாளர் சு.பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலும் மாணவர் மன்ற மாவட்ட தலைவர் ஜெ.பி.வீரபாண்டியன் முன்னிலையிலும் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் பேரணியாக தொடங்கி விளமல் வழியாக கடைவீதி கடந்து திருவாரூர் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் இரு அமைப்பின் நிர்வாகிகள் கோ.சரவணன், எம்.நல்லசுகம், எஸ்.பாப்பையன், சிவ.ரஞ்சித், அ.பிச்சைமுத்து, ஜெ.கனேஷ், பி.வி.சி.கார்த்தி, எம்.ஷேக் தாவூத், அ.காந்தி, க.ராமகிருஷ்ணன், ஜோ.பாரதசெல்வன், க.கோபி, எஸ்.சிவனேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இதில் அத்தியாவசிய பொருள்கள் திருத்தச்சட்டம் 2020, வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு) மற்றும் உறுதி செய்து கொடுத்தல் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம், மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com