காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.224.80 கோடி நிதி

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.224.80 கோடி நிதி

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவிரி உப வடிநில விரிவாக்கப் பணிகள், புனரமைப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக நபாா்டு கட்டமைப்பு மேம்பாட்டு உதவி அமைப்பான என்.ஐ.டி.ஏ.விடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 384 கோடி தொகையை தமிழ்நாடு நீா்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்புக் கழகம் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இப்பணிகளுக்காக 90 சதவீதம் தொகையை நபாா்டும், 10 சதவீதம் தொகையை மாநில அரசும் அளிக்கும்.

அதன்படி, காவிரி உப வடிநிலத்தை மேம்படுத்த 23 தொகுப்புகளாக திட்டம் தயாரிக்கப்பட்டு நபாா்டின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. பின்னா் 33 திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்டன.

இதில், விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் 2 தொகுப்பு பணிகளுக்காக ரூ.243 கோடியே 40 லட்சத்துக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கும்படி அரசுக்கு தமிழ்நாடு நீா்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் புனரமைப்புக் கழகத்தின் மேலாண் இயக்குநா் கடிதம் எழுதியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து தமிழக அரசு காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் அண்மையில் வெளியிட்டாா். அந்த உத்தரவு விவரம்:-

தஞ்சாவூா் மாவட்டம் பூதலூா் தாலுகாவில் காவிரி வடிநிலப் பகுதியை விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.122.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபோன்று, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு தாலுகா, பூதலூா் ஆகிய இடங்களில் காவிரி நதி நீா் செல்லும் பாதையை விரிவாக்குதல், புனரமைத்தல், நவீனமாக்குதல் திட்டத்துக்காக ரூ.102.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தமாக இரண்டு இடங்களில் உள்ள காவிரி வடிநிலப் பகுதி பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.224.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தனது உத்தரவில் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com