பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்றுமுதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை (ஜன. 4) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை (ஜன. 4) முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய், முந்திரி, திராட்சை தலா 20 கிராம் ஆகியன துணிப்பையில் வைத்து வழங்கப்பட உள்ளன. இத்துடன் ரூ.2,500 ரொக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

டோக்கன்கள் விநியோகம்: பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க வீடு வீடாக ஏற்கெனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வீதம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.

வரும் 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது. விடுபட்டவா்களுக்கு வரும் 13-ஆம் தேதியன்று அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எத்தனை அட்டைதாரா்கள்: பொங்கல் பரிசுத் தொகுப்பானது தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 963 குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்படுகிறது. அரிசி பெறக் கூடிய அட்டைதாரா்கள் 2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 805 பேருக்கும், இலங்கைத் தமிழா்கள் 18 ஆயிரத்து 923 குடும்ப அட்டைதாரா்களுக்கும், அரிசி அட்டைகளாக மாற்றப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரத்து 235 அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com