தேய்பிறை அஷ்டமி: சங்ககிரி மலையில் உள்ள கால பைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை 

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில்  உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், தட்சினகாசி பைரவர் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தேய்பிறை அஷ்டமியையொட்டி சங்ககிரி மலையில்  உள்ள அருள்மிகு தட்சினகாசி பைரவர் சுவாமிக்கு புதன்கிழமை மஞ்சள், சந்தனங்களைக் கொண்டு செய்யப்பட்ட அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு தட்சினகாசி பைரவர் சுவாமிக்கு புதன்கிழமை மஞ்சள், சந்தனங்களைக் கொண்டு செய்யப்பட்ட அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும்.



சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில்  உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், தட்சினகாசி பைரவர் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

சங்ககிரி மலையில் உள்ள 2வது மண்டபத்தில்  தெற்கு திசை நோக்கி அருள்மிகு சொர்ண ஆகர்ஷ்ண பைரவரும், மேற்கு திசை நோக்கி அருள்மிகு  தட்சின காசி பைரவரும்  உள்ளனர், இரு சுவாமிகளுக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com