துண்டுப் பிரசுரத்தை வழங்கும் ஊராட்சித் தலைவர்
துண்டுப் பிரசுரத்தை வழங்கும் ஊராட்சித் தலைவர்

'ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவோம்': வரவு செலவு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கிய தலைவர்

துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சியின் வருவாய் (வரவு) மற்றும் செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை, ஊராட்சித் தலைவர் பொதுமக்களிடம் நேரில் வழங்கினார்.


துறையூர்: துறையூர் அருகே கோட்டாத்தூர் ஊராட்சியின் வருவாய் (வரவு) மற்றும் செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை, ஊராட்சித் தலைவர் பொதுமக்களிடம் நேரில் வழங்கினார்.

முசிறி ஒன்றியத்தைச் சேர்ந்தது கோட்டாத்தூர் ஊராட்சி. இதன் தலைவராக பா. திருமூர்த்தி உள்ளார். இவர் இந்த ஊராட்சியின் தலைவராகத் தேர்வாகி அந்தப் பொறுப்பை ஏற்று புதன்கிழமையுடன் (ஜன.6) ஒரு வருடம் நிறைவடைந்தது. 

இதனையடுத்து வெளிப்படையான நிர்வாகம் செய்ய விரும்பவதாகக் கூறி கடந்த 6.1.2020 முதல் 6.1.2021 வரை கோட்டாத்தூர் ஊராட்சியின் வருவாய் (வரவுகள்) மற்றும் செலவுகள் விவரம் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை புதன்கிழமை வழங்கினார்.

அதில், "மாநில நிதிக் குழு நிதி ரூ. 6,83,286, மத்திய நிதிக் குழு நிதி ரூ. 2,00,000 சேர்த்து, வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வீட்டு மனைப் பிரிவு அனுமதிக் கட்டணம், சந்தை ஏலம், வங்கி வழங்கிய வட்டி உள்ளிட்ட இனங்களின் மூலம் ஊராட்சியின் வருவாய் ரூ. 16,98,951. 

நீர்த் தேக்கத் தொட்டிகள், குடிநீர் விநியோகக் குழாய், தெருவிளக்கு, கைபம்பு ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் ஊராட்சிப் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட இனங்களுக்கு செய்யப்பட்ட செலவு ரூ. 16,14,185.

கோட்டாத்தூர் ஊராட்சியின் நிர்வாகம் குறித்த அனைத்து நிர்வாக விபரங்களையும் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவோம் என்று அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் திருமூர்த்தி நேரில் சென்று வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com