சென்னையில் இடைவெளி விடாமல் பெய்த மழை: முழு விவரம்

சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுவதும் தொடர்ந்து நின்று நிதானமாகப் பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.
சென்னையில் இடைவெளி விடாமல் பெய்த மழை: முழு விவரம்
சென்னையில் இடைவெளி விடாமல் பெய்த மழை: முழு விவரம்


சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை, நாள் முழுவதும் தொடர்ந்து நின்று நிதானமாகப் பெய்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.

ஜனவரி மாதத்தில் இப்படி மழை பெய்கிறதே என்று சென்னைவாசிகள் ஆச்சரியப்படும் அளவுக்கு நேற்று இடைவெளி விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால், தண்ணீர் தேங்காத சாலைகளில் கூட மழைநீர் சூழ்ந்து கொண்டது. போக்கிடம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் மழை நீர் சாலைகளில் சிக்கித் தவித்தது.

எவ்வளவு வெயிலையும் தாங்கும் சென்னைவாசிகளால், ஒரு சொட்டு மழை நீர் மண்ணில் விழுந்தால் கூட, நகரத்துக்குள் கால் வைக்க பயப்படும் சூழலே இதுவரை நீடிக்கிறது. ஒன்று சாலைகளில் தேங்கும் தண்ணீரும், காலைவாரக் காத்திருக்கும் குண்டு குழிகளும்.

சரி நேரடியாக விஷயத்துக்கு வரலாம். நேற்று சென்னையில் ஒட்டுமொத்தமாக 1353.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 9 மணியுடன்  நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிண்டியில் 162.20 மி.மீ. மழையும் மாம்பலத்தில் 149.20 மி.மீ. மழையும் சோளிங்கநல்லூரில் 139 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதற்கடுத்து, மைலாப்பூரில் 138 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 128.20 மி.மீ. மழையும் பெரம்பூரில் 119 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com