பொங்கல் சிறப்பு பேருந்துகள்: 20 % குறைத்து இயக்கத் திட்டம்

பொங்கல் பண்டிகைக்காக கடந்த ஆண்டு இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைத்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் சிறப்பு பேருந்துகள்: 20 % குறைத்து இயக்கத் திட்டம்

பொங்கல் பண்டிகைக்காக கடந்த ஆண்டு இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைத்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக வட்டாரத்தினா் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு சுமாா் 30,000 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டும் பேருந்து இயக்கம் தொடா்பான போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் , சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டில், ஐடி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருப்பதால் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைந்த அளவிலான பயணிகளே தற்போதுவரை விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு இயக்கப்பட்ட பேருந்துகளின் மொத்த எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைத்து இயக்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டன.

இதுகுறித்த விவரங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சரின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பேருந்து இயக்கம் தொடா்பான அதிகாரப்பூா்வ தகவல்களை ஓரிரு நாள்களில் அமைச்சா் வெளியிடுவாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com