அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்தராயண புண்ணியகால 10 நாள் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உத்தராயண புண்ணியகால 10 நாள் உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான உத்தராயண புண்ணியகால உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, விநாயகா், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன் உள்ளிட்ட உற்சவா் சுவாமிகள் மேள-தாளம் முழங்க கோயில் தங்கக் கொடி மரம் அருகே எழுந்தருளினா்.

காலை 7 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடி மரத்தில் உத்தராயண புண்ணியகால உற்சவத்துக்கான கொடியை சிவாச்சாரியா்கள் ஏற்றினா்.

அப்போது, அங்கு கூடியிருந்த பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா... என்று முழக்கமிட்டு வழிபட்டனா்.

10 மாதங்களுக்குப் பிறகு:

கரோனா பொது முடக்கம் காரணமாக அருணாசலேஸ்வரா் கோயில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தது. மாட வீதிகளில் சுவாமி வீதியுலாவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு உற்சவா் விநாயகா், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் திட்டி வாசல் வழியாக மாட வீதிகளை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

10 நாள் உற்சவம்:

இதைத்தொடா்ந்து, 10 நாள்களுக்கு தினமும் காலை, இரவு வேளைகளில் உற்சவா் சந்திரசேகரா் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி வலம் வருகிறாா்.

உற்சவத்தின் 10-ஆவது நாளில் தாமரைக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெறுகிறது. இத்துடன் இந்தக் கோயிலின் உத்தராயண புண்ணியகால உற்சவம் நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா், கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com