சிவகாசியில் போக்குவரத்து விதியை மீறியதாக 1.31 லட்சம் வழக்குகள் பதிவு 
சிவகாசியில் போக்குவரத்து விதியை மீறியதாக 1.31 லட்சம் வழக்குகள் பதிவு 

சிவகாசியில் போக்குவரத்து விதியை மீறியதாக 1.31 லட்சம் வழக்குகள் பதிவு

சிவகாசியில் போக்குவரத்து விதியை மீறியதாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி காவல் துணை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சிவகாசி காவல் கோட்டத்தில் நடந்த 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து விதியை மீறியதாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி காவல் துணை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. 

சிவகாசி காவல் துணை கோட்ட அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, 

சிவகாசி காவல்துறை கோட்டத்தில் நடந்த 2020ஆம் ஆண்டு 12 கொள்ளை வழக்குகளும் 30 திருட்டு வழக்குகளும் 12 கொலை வழக்குகளும் எட்டு கொலை முயற்சி வழக்குகளும் 43 அடிதடி வழக்குகள் 51 சாலை விபத்து வழக்குகளும், எழுபத்தாறு சாலை விபத்தில் காயமடைந்த வழக்குகளும், 26 கஞ்சா வைத்திருந்த வழக்குகளும் 41 பணம் வைத்து சீட்டு விளையாடிய வழக்குகளும் மதுபாட்டில்களை அனுமதியின்றி வைத்திருந்ததாக 426 வழக்குகளும், 

வெடிபொருள் சட்டத்தின் கீழ் 25 வழக்குகளும் 3 வழக்குகளும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு வைத்திருந்ததாக 112 வழக்குகளும் சிறு குற்றங்களுக்காக 373 வழக்குகளும் போஸ்கோ சட்டத்தின்கீழ் 2 வழக்குகளும் பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பேசியதாக 2387 வழக்குகளும் கவசம் அணியாமல் வாகனம் சென்றது அதிவேகமாக வாகனம் சென்றது உள்ளிட்ட போக்குவரத்து விதியை மீறியதாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 789 வழக்குகளும் பதிவாகி உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com