தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு செட்டியார் பேரவைத் தலைவர் நிதி உதவி

தேனி மாவட்டம்  கோவிந்தன்பட்டியைச்சேர்ந்த ஆண், பெண் குழந்தைகள் அடுத்தடுத்து தாய் தந்தையை இழந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கோரினார்.
தாய் தந்தையை இழந்த கோவிந்தன்பட்டியைச்சேர்ந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கிய தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஏ.ஜெகனாத்மிஸ்ரா.
தாய் தந்தையை இழந்த கோவிந்தன்பட்டியைச்சேர்ந்த ஆண், பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கிய தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஏ.ஜெகனாத்மிஸ்ரா.

கம்பம்: தேனி மாவட்டம்  யைச்சேர்ந்த ஆண், பெண் குழந்தைகள்  அடுத்தடுத்து தாய் தந்தையை இழந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி கோரினார். இவர்களுக்கு தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஏ.ஜெகனாத்மிஸ்ரா நிதியுதவி வழங்கினார்.

தேனி மாவட்டம் கோவிந்தன்பட்டியைச்சேர்ந்த  மாரிமுத்து (42)-அக்காண்டி (42) தம்பதியினருக்கு கோவிந்தராஜ்(14), ஈஸ்வரி(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் கடந்த ஆண்டு அடுத்தடுத்து வலிப்பு நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களை, அவரது அப்பா உடன் பிறந்த அத்தையான சஞ்சீவி என்பவர் எந்தவொரு ஆதரவுமின்றி குழந்தைகளை ஆதரித்து வருகிறார். 

இந்நிலையில், சஞ்சீவி என்பவர் இரண்டு குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கும், படிக்க வைப்பதற்கு உதவிக்கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க வந்தார்.

இதுபற்றி சஞ்சீவி கூறும்போது தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் எங்களது குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இவர்களின் நிலையை கேட்டிருந்தார் தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் பி.எல். ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரடியாக குழந்தைகளின் வீட்டுக்குச் சென்று நிதி உதவி வழங்கினார். குழந்தைகளின் உறவினர்களிடம் அவர்களது படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com