தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு பிரச்னை மீண்டும் வந்துவிடும்: முதல்வர் 

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு பிரச்னை மீண்டும் வந்துவிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு பிரச்னை மீண்டும் வந்துவிடும்: முதல்வர் 

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு பிரச்னை மீண்டும் வந்துவிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி 2ஆவது நாளாக இன்றும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சித்தோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரையில், தமிழகம் இன்றைக்கு மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது. தடையில்லா மின்சாரம் தமிழகத்திலே கிடைக்கின்ற காரணத்தினாலேதான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. 
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருவதால், இன்றைக்கு தமிழ்நாடு தொழில் துறையில் முதன்மை மாநிலமாக திகழ்ந்துக் கொண்டிருக்கின்றது. கரோனா காலத்திலும் ரூ.60,000 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. கரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த ஒரே அரசு தமிழ்நாடு அரசு தான். 
ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் வேளாண்மை மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்க வேண்டும். தமிழகம் இரண்டிலும் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின் வெட்டு பிரச்னை மீண்டும் வந்துவிடும். 
மின்வெட்டு தருகின்ற ஆட்சி தேவையா? தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அராஜகம், ரௌடித்தனம் வந்துவிடும், கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். அப்பாடி ஒரு ஆட்சி மீண்டும் வர வேண்டுமா? வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தீய சக்தி தி.மு.கவை புறக்கணிப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com