எடப்பாடி பகுதியில் திடீர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் வியாழக்கிழமைஅதிகாலை பெய்த திடீர் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.
மழைநீரால் பாதிப்பிற்குள்ளான எடப்பாடி உழவர் சந்தை
மழைநீரால் பாதிப்பிற்குள்ளான எடப்பாடி உழவர் சந்தை

எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் வியாழக்கிழமைஅதிகாலை பெய்த திடீர் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது.

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் கனப்பட்ட நிலையில், வெள்ளிஅன்று அதிகாலை நேரத்தில் இப்பகுதியில் மிதமாக மழைப்பெய்தது. அதிகாலை நேரத்தில் கொட்டிய திடீர் மழையால், காய்கறி , பால் உள்ளிட்ட அத்தியவசிப் பொருள்களின் விற்பனை பாதிப்பிற்குள்ளானது. 

எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் இயங்கிவரும் உழவர் சந்தைக்கு செல்லும் பிரதான சாலை முழுவதும் சரியான பராமரிப்பு இல்லாத நிலையில், திடீர் மழையால் சகதிகாடானது. இதனால் அதிகாலை நேரத்தில் உழவர் சந்தைக்கு வந்தவர்கள் சகதியில் விழுந்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டது. 

மேலும் உழவர் சந்தையின் உற்புறத்திலும் மழைநீர் தேங்கியதால், தேங்கிய மழைநீர் நடுவே வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டது. 

மேலும் எடப்பாடி பேருந்து நிலையப்பகுதியில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

திடீர் மழையால் ராஜாஜிபூங்கா தினசரி மார்கட், பஜார்தெரு, ஈஸ்வரன் கோவில் கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகள் வியாழக்கிழமை அதிகாலை முதல் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

கடினமான நோய்த்தொற்றுக்கள் பரவிவரும் இச்சூழலில், நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளான உழவர் சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் தேங்கி நோய்த்தொற்று பரவாமல் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com