கோவையில் திடீரென கன மழை

கோவையில் திடீரென பெய்த கன மழையால் கோவை நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
கோவை திருச்சி ரோடு பர்க் ஸ்கூல் அரிய பாதாள சாக்கடை திட்டத்தை போடப்பட்ட போலி மழையின் காரணமாக திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. 
கோவை திருச்சி ரோடு பர்க் ஸ்கூல் அரிய பாதாள சாக்கடை திட்டத்தை போடப்பட்ட போலி மழையின் காரணமாக திடீரென்று பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

கோவையில் திடீரென பெய்த கன மழையால் கோவை நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் ராட்சத குழாய் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை ராமநாதபுரம் திருச்சி ரோடு பகுதியில் முறையினால் ஏற்பட்டுள்ள  சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து நிலையில், கோவையில் புதன்கிழமை மாலை முதல் இரவு முழுவதும் திடீரென பலத்த மழை பெய்தது.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பூ மார்க்கெட்டில் மழையால் தேங்கியுள்ள நீர்.

இதில் கோவையின் முக்கிய நகரான காந்திபுரம், 100 அடி ரோடு, அவிநாசி ரோடு, சிங்கநல்லூர், பூ மார்க்கெட், புரூப் அண்ட் சாலை, கிக்கானி பள்ளி போன்ற பகுதிகளில் பாலங்களின் அடியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பூ மார்க்கெட்டில் மழையால் தேங்கியுள்ள நீர்.

இதில் குறிப்பாக கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் ஒரு வாகனம் மழை நீரில் சிக்கியுள்ளது. 

கோவை திருச்சி ரோடு பர்க் ஸ்கூல் பாரிலே பாதாள சாக்கடை பணி நிறைவடைந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய நான்கு சக்கர வாகனம்.

தகவலறிந்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாலை முதலே ராட்சத குழாய்கள் மூலம் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தி சாலை ஒழுங்குபடுத்தும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி (சைக்கிள்) கோவை அம்மணியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.

கோவையில் திடீரென பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் மிகவும் குளுமையாக காட்சியளிக்கின்றது. 

மேலும் 5 நாள்கள் தொடர் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாழக்கிழமை காலை முதலே கோவை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருண்ட வானிலை நிலவுகிறது.

மாநகராட்சி ஊழியர்களின் உடனடி நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவையில் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com