இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை வழங்கியது தமிழக அரசு தான்: முதல்வர்

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை வழங்கியது எங்களுடைய அரசு தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை வழங்கியது தமிழக அரசு தான்: முதல்வர்

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை வழங்கியது எங்களுடைய அரசு தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நெசவாளர்கள் மற்றும் செங்குந்த முதலியார் சமுதாயத்தினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை, பெருந்துறை ஒரு வறட்சியான பகுதியாக இருப்பதால், இங்குள்ள ஏரிகள், குளங்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகளும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையை ஏற்று அத்திக்கடவு- அவிநாசித் திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை போக்கும் விதமாக கொடிவேலி கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறோம். கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்கெல்லாம் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோன்று, நல்ல சாலை வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறோம்.
அரசுப் பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை, எளிய நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. நான் கிராமத்தில் பிறந்தவன். அதனால் கிராம மக்களின்
தேவையை நன்கு அறிந்து, அவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன். 
கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில இடம் கிடைத்தது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திய காரணத்தினால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 313 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் பயிலவும், 92 மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவம் பயிலவும் வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குண்டான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். ஏழை, எளிய மக்கள் பெற்றெடுத்த குழந்தைகள் மருத்துவர்களாக வேண்டும் என்பது தான் எங்களுடைய லட்சியம்.
ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 2,000 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 52 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் அந்த பகுதியிலேயே
பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். போக்குவரத்துத் துறையில் சார்பில் பெருந்துறையில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றியுள்ளோம். தமிழக அரசு நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது. 
இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு பசுமை வீடுகளை வழங்கியது எங்களுடைய அரசு தான். அதேபோல, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் விலையில்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கி வருகிறோம். அதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருகின்றன.
தொழில் வளம் பெருக எங்கள் அரசு எப்போதும் துணை நிற்கும் எனத் தெரிவித்து சமுதாயத் தலைவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, சாத்தியமானவற்றை நிறைவேற்றித் தரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com