மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
உயா்நீதிமன்றம்.
உயா்நீதிமன்றம்.


சென்னை: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்களது நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், சட்டவிரோதமான இணையதளங்களில் மாஸ்டர் படத்தை வெளியிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். எனவே இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என வாதிட்டார்.

இதனையடுத்து  வழக்கை விசாரித்த நீதிபதி, மாஸ்டர் திரைப்படத்தை 400 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் 29  நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com