தமிழகத்தில் கரோனா சிகிச்சை, தடுப்பூசி பணிகள் திருப்தி: ஹர்ஷ் வர்தன்

தமிழகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான பணிகள் மனநிறைவையும், திருப்தியையும் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்


சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான பணிகள் மனநிறைவையும், திருப்தியையும் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா தடுப்பூசி பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

தமிகத்தில் கரோனாவுக்கான சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகளை மூன்று இடங்களில் ஆய்வு செய்தேன். தடுப்பூசி பணிகள் திருப்திகரமாகவும், மனநிறைவையும் தருகிறது. கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுளள்து என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com