நாமக்கல்லில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்

மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை ஆகியவை சார்பில் நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் சனிக்கிழமை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி தொடங்கியது.
நாமக்கல் கண்காட்சியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள்.
நாமக்கல் கண்காட்சியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள்.


நாமக்கல்: மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை ஆகியவை சார்பில் நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் சனிக்கிழமை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தொடங்கி வைத்தார். 

நாமக்கல் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் 

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டு துறையின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 

நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த ஓவியச் சிற்பக்கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இக்கண்காட்சியினை கலை பண்பாட்டுத் துறையின் ஆணையர் வ.கலையரசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

சென்னை,  தஞ்சை கவின் கலைக் கல்லூரிகளின் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை இயக்குநர் ஹேமநாதன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com