வேதாரண்யம் - தஞ்சை  வரையிலான விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயண இயக்கம் தொடக்கம்

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா தொடங்கி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை வரையில் விவசாய பிரச்னைகளை முன்வைத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயண இயக்கம் சனிக்கிழமை (ஜன.
வேதாரண்யத்தில் தொடங்கிய விவசாயிகள் பயணம் .பயணத்தை தொடங்கி வைத்த முன்னாள் எம்.பி. பி வி.ராசேந்திரன் .
வேதாரண்யத்தில் தொடங்கிய விவசாயிகள் பயணம் .பயணத்தை தொடங்கி வைத்த முன்னாள் எம்.பி. பி வி.ராசேந்திரன் .


வேதாரண்யம்: வேதாரண்யம் ராஜாஜி பூங்கா தொடங்கி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை வரையில் விவசாய பிரச்னைகளை முன்வைத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயண இயக்கம் சனிக்கிழமை (ஜன.9) காலையில் தொடங்கியது.
 
வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கவேண்டும், பயிர்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.

வேதாரண்யம் ராஜாஜி பூங்கா பகுதியில் இருந்து தொடங்கியுள்ள விவசாயிகள் பயணத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்துள்ளார்.

நீதி கேட்டு நெடும் பயணம் என்ற தலைப்பிலான விவசாயிகளின் பயணத்தை மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராசேந்திரன் தொடங்கி வைத்தார்.

ஊர்வலமாக சென்ற விவசாயிகள் வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் அமைந்துள்ள சர்தார் வேதரத்தினம், தியாகி வைரப்பன் சிலைகளுக்கு மாலை அணிவித்து பயணத்தை தொடர்ந்தனர்.

இந்த பயணம் தலைஞாயிறு, நாகை,காரைக்கால்,சீர்காழி, வழியாக சென்று மாலையில் மயிலாடுதுறையில் நிறைவடைகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை திருவாரூரில் தொடங்கி திருத்துறைப்பூண்டி, பட்டுகக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி, சாலியமங்கலம் வழியாக அன்று மாலை தஞ்சை ராஜராஜ சோழன் சிலை அருகே பயணம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com