ஏழு புதிய பாலங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ஏழு பாலங்களை முதல்வா் பழனிசாமி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
ஏழு புதிய பாலங்கள்: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ஏழு பாலங்களை முதல்வா் பழனிசாமி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

சேலம் மாவட்டம் திருச்செங்கோடு-அரியானூா் சாலையில் ரூ.45 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம்-அய்யனாா்கோவில் வழி செண்பகத்தோப்பு சாலை, தென்றல் நகரில் கட்டப்பட்டுள்ள பாலம், தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை-உடன்குடி சாலையில் கட்டப்பட்ட பாலம் ஆகியவற்றை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் செங்கமேடு-மணமடை-வெட்டிக்காடு சாலையில் கட்டப்பட்ட பாலம், தேனி மாவட்டம் பூலாநந்தபுரம், கோவை மாவட்டம் பீளமேடு-கோவை வடக்கு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கீழ்பாலம், சேலம் மாவட்டம் புங்கமடு, சேலம் வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலங்களையும் முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.

தொழில்நுட்பக் கையேடு: நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் அனைத்துப் பொறியாளா்களின் பயன்பாட்டுக்காக, நெடுஞ்சாலைத் துறையின் தொழில்நுட்பங்கள், துறையின் அனைத்து விவரங்கள் உள்ளடக்கிய கையேட்டை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா்.

திட்டப் பணிகளுக்கு அடிக்கல்: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் நீா் உட்புகாத வகையில் கடைமடைநீரொழுங்கி கட்டும் பணி, விருதுநகா் மாவட்டத்தில் அணைக்கட்டு கட்டும் பணி, மதுரை மாவட்டத்தில் தடுப்பணை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.24.78 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். இந்நிகழ்ச்சியில், அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com