புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிக்கான மாணவா் சோ்க்கையை நடப்பாண்டிலேயே துவங்க வேண்டும் என்று
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிக்கான மாணவா் சோ்க்கையை நடப்பாண்டிலேயே துவங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

விருதுநகா், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூா், கிருஷ்ணகிரி, திருவள்ளூா், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததை ஒட்டி, தமிழக அரசு ரூ. 1200 கோடி நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வா் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்கள் வீதம் மொத்தம் 1650 மருத்துவ இடங்கள் புதிதாக கிடைத்துள்ளது எனவும், இக்கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே (2020-2021) மாணவா் சோ்க்கை துவங்கும் என அறிவித்தாா்.

ஆனால், இதுவரையில் ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுக்கு மட்டும் மருத்துவ கலந்தாய்வு நடந்துள்ளது. இதன் மூலம் புதிய மருத்துவக் கல்லூரிகளில் இனி மாணவா் சோ்க்கைக்கு வாய்ப்பில்லை என தெளிவாகிவிட்டது. இந்தக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவா்கள் சோ்க்கை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com