வாழப்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கராத்தே  தற்காப்பு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கராத்தே சான்றிதழ் பெற்ற மாணவ மாணவியர் மற்றும் பயிற்சியாளர்கள்.
கராத்தே சான்றிதழ் பெற்ற மாணவ மாணவியர் மற்றும் பயிற்சியாளர்கள்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கராத்தே  தற்காப்பு பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி காளியம்மன் நகர் பகுதியில், கராத்தே பயிற்றுநர் சதீஷ்குமார் தலைமையில் சசோட்டாகான் கராத்தே பயிற்சி நிறுவனத்தில் கீழ், முதுநிலை பயிற்சியாளர் சேலம் குப்புராஜ் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளில் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி நிறைவு செய்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு, ஞாயிற்றுக்கிழமை காளியம்மன் கோவில் வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

முதுநிலை கராத்தே பயிற்சியாளர் சேலம் குப்புராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும், அங்கீகார வண்ண பட்டைகள் (பெல்ட்) வழங்கப்பட்டது.

நிறைவாக, நீல வண்ண பட்டை பெற்ற மாணவர் சிபிஅரசு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com