புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நலத் திட்டங்களைத் தடுத்து வரும் புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்தும், அவா் புதுவையிலிருந்து வெளியேறக் கோரியும் காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை முதல் வருகிற 11-ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா். 
அதன்படி, ‘புதுவையை மீட்போம், காப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டத்தை வெள்ளிக்கிழமை புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தொடங்கினா். 
இந்த நிலையில் கடந்த 3 நாள்களாக ஆளுநருக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்வர் நாராயணசாமி இன்று தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் பாஜக துணையுடன் இரடை ஆட்சி முறையை நடத்தி வந்தார் கிரண்பேடி. புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆளுநர் கிரண்பேடிதான் காரணம். ஜன.22ஆம் தேதி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து பிப்.1ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com