நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சனேய  சுவாமிக்கு இன்று அதிகாலை ஒரு லட்சத்து 08 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது.
அனுமன் ஜெயந்தியையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி.
அனுமன் ஜெயந்தியையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி.

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சனேய  சுவாமிக்கு இன்று அதிகாலை ஒரு லட்சத்து 08 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில்  ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. 
இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணியளவில் ஒரு லட்சத்து 08 எண்ணிக்கையிலான வடைமாலை சுவாமிக்கு சாத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.  

ஆஞ்சனேய ஜெயந்தி விழாவையொட்டி, காலை 11 மணி வரை வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்டவற்றாலான அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெறுகிறது. 


நண்பகல் 1 மணியளவில் சிறப்பு தங்கக் கவசம் சாத்தப்படுகிறது. ஆஞ்சனேயரை தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 750 பேர், இலவச தரிசன முறையில் 750 பேர் என ஒரு மணி நேரத்திற்கு 1500 பக்தர்கள் வீதம்  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதையொட்டி  நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.  

விழாவுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்லும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com