மானாமதுரை கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. 
மானாமதுரை வீரழகர் கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் வீர ஆஞ்சனேயர் சுவாமி.
மானாமதுரை வீரழகர் கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் வீர ஆஞ்சனேயர் சுவாமி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோயில்களில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. 

கோயில்தெரு பகுதியில் உள்ள வீரழகர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தெற்குமுகம் நோக்கி அருள்பாலிக்கும் மகுடம் தரித்த மூலவர் வீர ஆஞ்சனேயருக்கு  அபிஷேகம் நடத்தி சுவாமி வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்பின் சிறப்புப்பூஜைகள் தீபாரதனைகள் நடைபெற்றது. 

உற்சவர் ஆஞ்சனேயருக்கும் பால், தயிர், சந்தனம், பன்னீர், திரவியப்பொருள்கள் உள்ளிட்டவற்றால் 16 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு உற்சவமூர்த்தி மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனர். 

மேலும், மானாமதுரை வைகையாற்றுப்பாலம் அருகேயுள்ள வால்கோட்டை ஆஞ்சனேயர் கோயில், ரயில்வே காலணியில் பூர்ணசக்கர விநாயகர் கோயிலில் உள்ள ஆஞ்சனேயர் சன்னதி, புரட்சியார்பேட்டை பகுதியில் உள்ள தியாக வினோதப் பெருமாள் கோயிலில் ஆஞ்சனேயர் சன்னதி, பிருந்தாவனம் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சனேயர்,வீர ஆஞ்சனேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி  தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com