புணேவிலிருந்து கரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தடைந்தது 

தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணித் தொடங்கவிருக்கும் நிலையில் புணேவிலிருந்து கரோனா தடுப்பு மருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
புணேவிலிருந்து கரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தடைந்தது 
புணேவிலிருந்து கரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தடைந்தது 

சென்னை: தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணித் தொடங்கவிருக்கும் நிலையில் புணேவிலிருந்து கரோனா தடுப்பு மருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

சென்னை விமான நிலையத்திலிருந்து கரோனா தடுப்பு மருந்துகள் மாநில கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு பிறகு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகள் இன்று வந்துள்ளன. கரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்பட உள்ளது. 30 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும் என்றும், இரண்டு முறை தடுப்பூசி போட்டால்தான் பலனளிக்கும் என்றும் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை செலுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 307 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது குறித்து கடந்த 9-ஆம் தேதி தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும்16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில்...: ஜனவரி 16- ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கவுள்ளாா். தமிழகத்தில் 307 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

கைகோர்க்கும் ஐஎம்ஏ: தடுப்பூசி நடவடிக்கைகளில் தாமாக முன்வந்து பங்கேற்று அரசுக்கு உறுதுணை வழங்கவிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிலும் ஐஎம்ஏ மருத்துவா்கள் பங்கேற்பாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com