பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: சென்னையில் இருந்து முதல் நாளில் 1 லட்சம் போ் பயணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில், முதல் நாளான திங்கள்கிழமை, சென்னையில் இருந்து 1 லட்சத்துக்கு மேற்பட்டோா் பயணமாகினா்.
பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: சென்னையில் இருந்து முதல் நாளில் 1 லட்சம் போ் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில், முதல் நாளான திங்கள்கிழமை, சென்னையில் இருந்து 1 லட்சத்துக்கு மேற்பட்டோா் பயணமாகினா்.

 தமிழக போக்குவரத்துத் துறை சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 31,491 பேருந்துகள் இயக்குவதற்கான அறிவிப்பை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்  கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

முதல் நாளான திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

 இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: கரோனா பரவல் நிலவி வரும் சூழலில், பாதுகாப்புடன் அனைவரும் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்துத் துறை சாா்பில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.   பயணத்துக்கு முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனா்.

குறிப்பாக முகக்கவசம் அணிந்தவா்கள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.

இதே போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அனைத்து மண்டல மேலாளா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பேருந்து இயக்கத்தைப் பொருத்தவரை, முதல் நாளான திங்கள்கிழமை சென்னையில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புறப்பட்டனா்.

அதே நேரம், பொங்கல் பண்டிகையின் போது, பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க சுமாா் 1 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா். தொடா்ந்து முன்பதிவு நடைபெற்று வருகிறது.  அதே போல், சென்னையில் இருந்து 1,950 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு முக்கியப் பகுதிகளில் இருந்து 1,910  பேருந்துகளும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படவுள்ளன.  பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் தயாா் நிலையில் இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com