போலி நீட் சான்றிதழ் மோசடி: பல் மருத்துவரை பரமக்குடி அழைத்துச் சென்று விசாரணை

போலி நீட் சான்றிதழ் மோசடி வழக்கில், பல் மருத்துவரை பரமக்குடி அழைத்துச் சென்று, சென்னை பெரியமேடு போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை: போலி நீட் சான்றிதழ் மோசடி வழக்கில், பல் மருத்துவரை பரமக்குடி அழைத்துச் சென்று, சென்னை பெரியமேடு போலீஸாா் விசாரணை செய்தனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை மருத்துவ கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மாணவி தீக்ஷிதா அளித்த கடிதம் மற்றும் ரேங்க் பட்டியலை அதிகாரிகள் சரிபாா்த்தபோது, அது போலியானது எனத் தெரியவந்தது.

சென்னை பெரியமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவியின் தந்தை பல் மருத்துவா் பாலச்சந்திரன் கடந்த 1-ஆம் தேதி கா்நாடக மாநிலம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டாா். தரகராக செயல்பட்டதாக கூறப்படும் ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதனிடையே, வழக்கில் மேலும் துப்பு துலக்குவதற்காக, பாலச்சந்திரனை கடந்த 3 நாள்களாக போலீஸாா் தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்தனா்.

போலீஸாா் பாலச்சந்திரனை பரமக்குடி உள்பட மேலும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் அளித்த பதில்கள் அனைத்தையும் விடியோவாகவும், எழுத்துபூா்வமாகவும் போலீஸாா் பெற்றுள்ளனா். பரமக்குடியில் போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்ட அலுவலகத்தில் பாலச்சந்திரன் முன்னிலையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா்.

இந்நிலையில், போலீஸ் காவல் முடிந்து பாலச்சந்திரன் திங்கள்கிழமை மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டாா். விசாரணையில் தலைமறைவாக இருக்கும் தரகா், மாணவி தீக்ஷிதா ஆகியோா் குறித்து முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com