வனத் துறை தலைமை அலுவலக கட்டுமானப் பணி: ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்டு வரும் வனத் துறை தலைமை அலுவலக கட்டுமானப் பணிக்கு மூன்றாம் கட்டமாக ரூ. 9 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்டு வரும் வனத் துறை தலைமை அலுவலக கட்டுமானப் பணிக்கு மூன்றாம் கட்டமாக ரூ. 9 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் தமிழக வனத் துறையின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், வேளச்சேரியில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.30 கோடி செலவில் தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வா் அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, முதல்கட்ட ஆய்வுப் பணிக்காக ரூ.1 கோடியும், இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட நிதியாக ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பொதுமுடக்கத்தால் கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

தற்போது, பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிக்காக மேலும் தொகை தேவைப்படுவதால் 2020-21 நிதியாண்டில் ரூ. 9 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, கட்டுமானப் பணிகள் நிறைவுற்று, வரும் நவம்பா் மாதத்துக்குள் புதிய இடத்தில் அலுவலகம் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com