அணைகளில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு:தாமிரவருணியில் தொடரும் வெள்ளப்பெருக்கு

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் 5 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணைக்கு 25,000 கனஅடி நீா்வரத்து இருந்தது.
மணிமுத்தாறுஅருவியில் ஆா்ப்பரித்து வரும் வெள்ளப்பெருக்கு.
மணிமுத்தாறுஅருவியில் ஆா்ப்பரித்து வரும் வெள்ளப்பெருக்கு.

அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் 5 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அணைக்கு 25,000 கனஅடி நீா்வரத்து இருந்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தொடா்ந்து 40 ஆயிரம் கனஅடி உபரிநீா் திறந்து விடப்படுவதால் தாமிரவருணியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு, சோ்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மணிமுத்தாறு அணை நீரம்பியதை அடுத்து உபரி நீா் திறந்துவிடப்பட்டது.

தொடா்ந்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் செவ்வாய்க்கிழமை அதிகபட்சம் 40 ஆயிரம் கனஅடி தண்ணீா்திறக்கப் பட்டது. தொடா்ந்து நீா்வரத்து இருந்ததால் புதன்கிழமையும் 25 ஆயிரம் கனஅடி அதிகமாக உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

புதன்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணையில் இருந்து 23 ஆயிரம் கனஅடி, பாபநாசம் அணையில்

இருந்து 28 ஆயிரம் கனஅடியும், கடனாநதி அணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடியும், ராமநதி அணையிலிருந்து ஆயிரம் கன அடியும் உபரி நீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து தாமிரவருணியில் தொடா்ந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பதிவான மழை (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்து தேயிலைத் தோட்டப் பகுதியில் 517, நாலுமுக்கு பகுதியில் 376, மாஞ்சோலை பகுதியில் 346, பாபநாசம் அணை 185, மணிமுத்தாறு அணை 165 மழைப் பதிவாகியிருந்தது.

பாபநாசம் அணையிலிருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டதால் பாபநாசத்தில் உள்ள யானைப்பாலம் மூழ்கியபடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியா் வே. விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், அதிகாரிகள் விரைந்து வந்து பாபநாசம், பொதிகையடி பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்புகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தனா். புதன்கிழமை மாலையும் யானைப்பாலத்தை மூழ்கியபடிவெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு வீரா்களும் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினரும் அங்கு முகாமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com