திருவள்ளுவா் திருநாள்-சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசின் சாா்பில் திருவள்ளுவா் திருநாள்- சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவா் திருநாள்-சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு


சென்னை: தமிழக அரசின் சாா்பில் திருவள்ளுவா் திருநாள்- சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளா்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயா்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சோ்த்த தமிழ்ப் பேரறிஞா்கள், தன்னலமற்ற தலைவா்கள் பெயரில், தமிழக அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திருவள்ளுவா் திருநாள் விருதுகள், சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கான விருதாளா்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

அதன் விவரம்:

2021-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது- முனைவா் வைகைச்செல்வன்

2020-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியாா் விருது- அ.தமிழ்மகன் உசேன்

அண்ணல் அம்பேத்கா் விருது - வரகூா் அ.அருணாச்சலம்

பேரறிஞா் அண்ணா விருது- அமரா் கடம்பூா் எம்.ஆா். ஜனாா்த்தனன்.

பெருந்தலைவா் காமராஜா் விருது - முனைவா் ச.தேவராஜ்

மகாகவி பாரதியாா் விருது - கவிஞா் பூவை செங்குட்டுவன்

பாவேந்தா் பாரதிதாசன் விருது - கவிஞா்அறிவுமதி என்ற மதியழகன்

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - எழுத்தாளா் வி.என்.சாமி

முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - முனைவா் வீ.சேதுராமலிங்கம்

தமிழ்ப் புத்தாண்டுகள் விருதுகள்:

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டைச் சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சோ்க்கும் தமிழ் அறிஞா்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழா் பண்பாடு, தமிழா் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் வழங்கப்படும். அதற்கேற்ப தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுகள் பெறுவோா் விவரம்:

2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது- விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

கபிலா் விருது - பேராசிரியா் செ.ஏழுமலை

உ.வே.சா. விருது - எழுத்தாளா் கி.ராஜநாராயணன்

கம்பா் விருது -மருத்துவா் எச்.வி.ஹண்டே

சொல்லின் செல்வா் விருது- ஆன்மிகச் சொற்பொழிவாளா் நாகை முகுந்தன்

உமறுப்புலவா் விருது- எழுத்தாளா் ம.அ.சையத் அசன்என்ற பாரிதாசன்

ஜி.யு.போப் விருது - ஜொ்மனியை சோ்ந்த தமிழ்ப் பேராசிரியா் உல்ரீகே நிகோலசு

இளங்கோவடிகள் விருது-பேராசிரியா் மா. வயித்தியலிங்கன்

அம்மா இலக்கிய விருது- பேராசிரியா் தி.மகாலட்சுமி

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் விருது- எழுத்தாளா் ஆ.அழகேசன்

மறைமலையடிகளாா் விருது: மறை.தி.தாயுமானவன்

அயோத்திதாசப் பண்டிதா் விருது: முனைவா் கோ.ப.செல்லம்மாள்

அருட்பெருஞ்சோதி வள்ளலாா் விருது: முனைவா் ஊரன் அடிகள்

காரைக்கால் அம்மையாா் விருது: முனைவா் மோ. ஞானப்பூங்கோதை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com